மார்கழி மாதம் 30- நாட்களும் காலை 5-முதல் 6 மணிக்குள் சுவாமிகளுக்கு அலங்கார பூஜை செய்து, ஆண்டாள் திருப்பாவை பாடல்கள் பாராயணம் செய்யப்படும். ஸ்ரீவைகுண்ட ஏகாதசியன்று இரவு சுவாமிக்கு மோகினி அலங்காரம் செய்து பின் காலை 4 முதல் 6-மணிக்குள் உற்சவமூர்த்திகள் கருடவாஹனத்தில் எழுந்தருளி சொர்க்கவாயிலை திறப்பார். அன்று முழுதும் சொர்க்கவாயில் திறந்திருக்கும்.