சித்திரைமாதம் 19-ம் தேதி
காலை 10- மணியளவில்: பிரமோத்சவம் சிறப்பாக நடைபெறவேண்டி வாஸ்து பூஜை நடைபெறும்.
மதியம் 3-4 மணியளவில்: கோவில் முக்கியஸ்தர்களுக்கு பட்டம் கட்டுதல் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
மாலை 6-7 மணியளவில்: வடவள்ளி கிழக்கு வினாயகர் கோவிலில் இருந்து சக்தி கலசம் அழைத்து வரப்படும்போது தாசர்களின் பந்தசேவை மற்றும் அவர்களின் மாத்துக்கவ்வாள பூஜையும் நடைபெறும்.
மாலை 7-8 மணியளவில்: சினன வடவள்ளியிலுள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து பேழையில் முப்பத்துமுக்கோடி தேவாதி தேவர்களையும் அழைக்கும் நிகழ்வு நடக்கும்.
சித்திரைமாதம் 20-ஆம் தேதி
காலை 2-6 மணியளவில்: நிர்வாகிகள் மற்றும் அன்பர்கள் கலந்துகொள்ளும் சுதர்சனஹோமம் பூஜை நடைபெறும்.
காலை 6-8 மணியளவில்: சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம். நமதுகுலப் பெண்மக்கள் சிறப்பு சீர் கொண்டுவரும் நிகழ்விற்குப்பின் மாங்கல்யதாரணமும் பக்தர்கள் ஆசிபெறும் நிகழ்வும் நடைபெறும்.
காலை 8-10 மணியளவில்: அன்னதானக்கூடத்தில் தாசர்களின் மஹேஸ்வரபூஜையும், சங்கநாதம் முழங்க 5 சுமங்கலிகள் அன்னதானத்தை தொடங்கிவைக்கும் நிகழ்வும் நடைபெறும்.
காலை 11-12 மணியளவில்: கருடவாஹனத்தில் உற்சவமூர்த்திகள் திருவீதி உலாவரும் நிகழ்வும், தாசர்கள் மாத்துபூஜை, கவ்வாள பூஜை மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.
மதியம் 12-1 மணியளவில்: மூலவர்கள் மற்றும் ஊற்சவர்களுக்கு உச்சிகால சிறப்பு பெரிய பூஜை பலவிதமான ஆரத்திகளுடனும் மற்றும் சோடச உபசாரங்களுடனும் சிறப்பாக நடைபெறும்.
மாலை 5-6 மணியளவில் விழாவிற்கு அழைத்துவரப்பட்ட தேவாதிதேவர்களை வழியனுப்பும் பூஜைகள் நடைபெறும்.