Untitled design (20)
வடவள்ளி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் பூஜைகள், மாதாந்திர அன்னதானம் மற்றும் சித்திரை, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி போன்ற சிறப்பான திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
கோயிலில் வரும் காலங்களில் அமாவாசை அன்னதான பூஜை, சித்திரை திருவிழா, புரட்டாசி 3ம் சனிகிழமை, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். திருவிழாக் காலங்களில் நேரம் நீட்டிக்கப்படும். கோவில் அர்ச்சகர் திரு. கேசவன் சாஸ்திரிகள். கைபேசி எண்கள்: 9488586656 - 8838359198.
நினைவேந்தல்.
நமது கோவில் வளர்ச்சிக்காக தங்களது வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட ஸ்தாபன அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தெய்வத் திருவாளர்கள்.
1) திருப்பூர் அப்பைய செட்டியார் அவர்கள்.
2) திருப்பூர் அப்பாவு செட்டியார் அவர்கள்.
3) திருப்பூர் சொக்கப்ப செட்டியார் அவர்கள்.
4) திருப்பூர் ஜரிகை பெருமாள் செட்டியார் அவர்கள்.
5) திருப்பூர் சாஸ்திரி ராமசாமி செட்டியார் அவர்கள்.
6) கோவை பெருமாள் செட்டியார் அவர்கள்.
மற்றும் தங்களது உழைப்பையும் பொருளையும் கோவிலின் நன்மைக்காக வழங்கிய பலருக்கும் இதன் மூலம் நன்றிகள் பல சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

கோவில் புகைப்படங்கள்

கோயில் அறங்காவலர்கள்

இந்த கோயில், அதன் ஆன்மிக வளத்தையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பாதுகாக்க, ஒரு அர்ப்பணிப்புடன் செயல்படும் அறங்காவலர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. அவர்கள் கோயிலின் தினசரி பூஜைகள், பராமரிப்பு, மற்றும் சமூக நிகழ்வுகளின் நேர்மையான நடைமுறையை உறுதி செய்கின்றனர். அறங்காவலர்களின் தன்னார்வத்தாலும் நேர்மையான சேவையாலும் கோயிலின் அடிப்படை வேலைகள் , சிறப்பாக நடைபெறுகின்றது, மேலும் இதன் மூலம் கோயிலின் ஆன்மிகம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி எப்போதும் தொடர்கிறது.